இந்த நிலையில் இதுகுறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஆளுநரின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது, ஆளுநர் தலைவராக இருக்கலாம், ஆனால் அவருக்கு ஆய்வு நடத்தும் அதிகாரம் கிடையாது.
மத்திய அரசுக்கு பயந்து தமிழக அரசு, ஆளுநரின் ஆய்வை அனுமதிக்கிறது. ஆளுநரின் ஆலோசனை கூட்டத்தை, மாவட்ட அதிகாரிகள் புறக்கணிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். ப.சிதம்பரம் அவர்களின் ஆலோசனையை மாவட்ட அதிகாரிகள் கேட்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்