11 மாவட்டங்களுக்கு மட்டும் தளர்வுகள் வழங்காதது ஏன்? – ஊரடங்கு அறிவிப்புகள்!

Webdunia
சனி, 5 ஜூன் 2021 (11:58 IST)
தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கிலிருந்து 11 மாவட்டங்களுக்கு மட்டும் தளர்வுகள் அளிக்கப்படவில்லை.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்ததால் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு 7ம் தேதியுடன் முடியும் நிலையில் அடுத்த 14ம் தேதி வரை கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத மாவட்டங்களுக்கு மட்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கொரோனா பாதிப்புகள் அதிகமுள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி பிற மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் எதுவும் இந்த மாவட்டங்களுக்கு கிடையாது.

இதுகுறித்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் கடந்த சில வாரங்களில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு வழக்கத்தை விட குறைந்துள்ள நிலையில், மேற்கண்ட மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு நிலவரம் அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது. இந்நிலையில் அம்மாவட்டங்களில் தளர்வுகள் அளித்தால் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்பதால் அம்மாவட்டங்களில் மற்ற மாவட்டங்களை விட கட்டுப்பாடு அதிகம் உள்ள ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், பாதிப்பு குறைவதை பொறுத்து வரும் வாரங்களில் தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்