தமிழகத்தில் பெரிய நகை கடைகள் 12 ஆயிரமும், சிறிய அளவிலான நகை கடைகள் 10 ஆயிரமும் உள்ளன. கடந்த 2011 ஆம் ஆண்டு அட்சய திருதியை அன்று 700 கிலோ தங்கம் விற்பனை செய்யப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு 720 கிலோவும், 2013 ஆம் ஆண்டு 1100 கிலோ தங்கமும் விற்பனை ஆனது.
கடந்த ஆண்டு 2014-ல் அட்சய திருதியை அன்று தங்கம் விற்பனை 1,500 கிலோவை தொட்டது. இந்த ஆண்டு கிராம் தங்கம் ரூ.2,526-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை குறைவாகக் காணப்பட்டதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்க நகைகளை வாங்கினர். இதனால் இந்த ஆண்டு தங்கம் விற்பனை 2,500 கிலோவை தொட்டு சாதனை படைத்துள்ளது.