இந்த நிலையில் யுவராஜ் உள்பட 10 பேர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவில் தனியார் தொலைக்காட்சி பேட்டி மற்றும் சிசிடிவி காட்சியின் அடிப்படையில்தான் தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது என்றும் எனவே அந்த தீர்ப்பை ரத்து செய்யவும் என்றும், அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்கவும் வேண்டுகிறோம் என்று கூறப்பட்டிருந்தது