நடுரோட்டில் வலியால் துடித்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு வீட்டில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த மாணவியின் பெற்றோர் வெங்கமேடு காவல் துறையில் புகார் செய்தனர். விசாரணையில் கரூரை சேர்ந்த தினகரன் என்ற வாலிபர் அந்த மாணவியிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அதை அந்த மாணவி ஏற்கவில்லை.
அதனால் தினகரன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து அந்த மாணவி மீது தாக்குதல் நடத்தியுள்ளார். கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் (341)வழிமறித்தல், (294பி) ஆபாச வார்த்தைகளால் திட்டுதல், (323) காயம் ஏற்படுத்துதல், (506) கொலை மிரட்டல், பெண்களுக்கெதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.