அ.தி.மு.க.வை மற்ற கட்சிகள் ஏளனம் செய்யும் அளவிற்கு விட்டுக் கொடுக்க கூடாது: கீதா மணிவண்ணன்

சனி, 26 ஆகஸ்ட் 2017 (18:51 IST)
தமிழகத்தில் தற்போது ஒ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணிகள் இணைந்த நிலையில் நாள் தோறும், தினகரன் அணி என்கின்ற அணி தற்போது விஸ்வரூபமெடுத்து வரும் நிலையில்., மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில் எனக்கு பின்னரும், இந்த அ.தி.மு.க கட்சி 100 ஆண்டுகளுக்கு மேலாக நல்லாட்சி நடைபெற்று மக்களுக்கு பல நல்ல திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.


 


ஆகவே நாம் (அ.தி.மு.க எம்.எல்.ஏ க்கள்) அனைவரும், அனைவரும் ஒன்றிணைய வேண்டும், அ.தி.மு.க என்ற ஒரு ஆலமரத்திற்கு கீழ் அனைவரும் ஒன்றிணைய வேண்டும், அ.தி.மு.க கழக உறுப்பினர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் சட்டமன்ற உறுப்பினர்களாகிய எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், மேலும் ஒன்றரை கோடி உறுப்பினர்களை கொண்ட இயக்கத்தினை வலுப்படுத்திட பிரிந்து சென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்றும்,

நம்மிடம் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாம் பேசி தீர்த்துக் கொள்ளலாம், ஆனால் எதிர்கட்சியினர் பேசும் அளவிற்கு நமது கட்சி செல்ல விடக்கூடாது. மேலும் எந்த எண்ணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்தோமோ, அவ்வாறே, நாம் சிறப்புடன் இன்று வரை செயல்பட வேண்டும், நம்முடைய முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தற்போது, இல்லை, ஆகவே, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்றிட வேண்டுமென்றால், நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும், பிரிந்து சென்றவர்கள் திரும்ப வாருங்கள் நாம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அமர்ந்து எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி செய்து கொள்ளலாம் என்றார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்