கெயில் விவகாரம்: ஜெயலலிதாவுக்கு ஜி.கே.நாகராஜ் கடிதம்

வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (23:21 IST)
கெயில் விவகாரத்தில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொங்குநாடு ஜனநாயக கட்சி  நிறுவனத் தலைவர் ஜி.கே.நாகராஜ் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
 

 
இது குறித்து, கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் ஜி.கே.நாகராஜ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
 
தமிழக விவசாய நிலங்களை பாதிக்கும் கெயில் நிறுவனத்திற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி, தமிழக அரசின் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
 
தமிழக அரசு தமிழ்நாட்டின்  பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமான ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்துவதிலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் கெயில் நிறுவனத்திற்கு எதிரான வழக்கிலும்,விவசாயிகள் மற்றும் மக்களுக்கு எதிரான தீர்ப்பையே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பெற்றுள்ளது.
 
மேற்கண்ட தோல்விகள் திறமையான வழக்கறிஞர்களையும், உரிய ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படாத காரணத்தாலும், அரசுதரப்பு வழக்கறிஞர்கள் போதிய ஆர்வம் காட்டாத காரணத்தாலும், அரசுக்கு எதிரான தீர்ப்பு கிடைத்துள்ளது.  
 
எனவே, உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவில் திறமையான வழக்கறிஞர்களை வைத்து வாதாடுவதுடன், தமிழக முதல்வர் இவ்வழக்கில் தனிப்பட்ட கவனம் செலுத்தி,விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்