இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வியாழன், 12 ஜனவரி 2023 (08:03 IST)
பொங்கல் பண்டிகைக்காக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது
 
பொங்கல் விடுமுறைக்காக நாளை முதல் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பொதுமக்கள் செல்ல உள்ளனர் என்பதும் வரும் ஞாயிறு அன்று பொங்கல் திருநாளை கொண்டாட உள்ளனர் என்றும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஜனவரி 12 முதல் பொங்கல் திருநாளுக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்தது என்பதை பார்த்தோம் 
 
அந்த வகையில் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக இன்று முதல் மூன்று நாட்களுக்கு அதாவது ஜனவரி 12 முதல் ஜனவரி 14 வரை 16932 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
 
கோயம்பேடு கே கே நகர் மாதவரம் உள்ளிட்ட ஆறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், இந்த ஆறு இடங்களுக்கு இணைப்பு பேருந்துகள் வசதியும் செய்யப்படும் என தமிழக அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்