கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா கார்டு: ஈபிஎஸ் அறிக்கை

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (13:50 IST)
கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு இலவச டேட்டா கார்டு வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். 
 
அந்த அறிக்கையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக தமிழக கல்லூரிகளில் வகுப்புகள் நடத்த முடியாத சூழ்நிலையில் மாணவர்களின் நலனுக்காக ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டன என்பதும் ஆன்லைன் வகுப்பில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக 2 ஜிபி டேட்டா கார்டுகளை வழங்க எனது தலைமையிலான அரசு உத்தரவிட்டது என்றும் கூறினார்.
 
தமிழக அரசின் மூலமாக விலையில்லா டேட்டா கார்டுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதும் அதனால் மாணவர்கள் மிகச் சிறந்த முறையில் ஆன்லைன் வகுப்பு படித்தார்கள் என்றும் தெரிவித்த எடப்பாடிபழனிசாமி கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கல்வி நிறுவனங்கள் செயல்படவில்லை என்பதால் மாணவர்களுக்கு இலவச டேட்டா கார்டுகள் தர வேண்டும் என்றும் இந்த ஆண்டு புதிதாக சேரும் மாணவர்களுக்கு புதிதாக டேட்டா கார்டுகளை தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்