அதிமுக மேயர் மீதான மோசடி புகார் ’க்ளோஸ்’

வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (23:25 IST)
நெல்லை அதிமுக மேயர் மீதான மோசடி புகார் முடித்து வைக்கப்பட்டதாக உயர்நீதி மன்ற கிளை தெரிவித்துள்ளது.
 

 
நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த முத்துக்கண்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”அலுவலகம் அமைப்பதற்காக இடம் பார்க்கையில் தேன். பாளையங்கோட்டையிலுள்ள ஒரு வணிக வளாகத்தில் கடை காலியாக இருப்பதாக தகவல் கிடைத்தது.
 
கடைக்கான ஒப்பந்தம் மற்றும் சாவியை பெற நெல்லை அதிமுக மேயர் புவனேஸ்வரிக்கு ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என கூறினர். இந்த பணத்தை மேயரின் உதவியாளரிடம் கொடுத்தேன். அதன்பிறகு கடை சாவியை கொடுத்தனர்.
 
ஆனால் வாடகை ஒப்பந்தத்தை தரவில்லை. இதனிடையே, ஆக .2ல் கடையை பூட்டி சீல் வைத்தனர். மேயர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் கூட்டு சேர்ந்து என்னிடம் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளனர். எனது புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
 
இந்த மனுவை நீதிபதி எஸ்.விமலா விசாரித்தார். அப்போது அரசுத் தரப்பில் மனுதாரரின் புகார் விசாரித்து முடிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்