மழை பாதிப்பு ; 14 லட்சம் குடும்பங்களுக்கு நாளை வெள்ள நிவாரண தொகை : ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள், 4 ஜனவரி 2016 (13:04 IST)
முதல்கட்டமாக 14 லட்சம் குடும்பங்களுக்கு நாளை வெள்ள நிவாரணத் தொகை அவர்களது வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


 

 
சமீபத்தில் பெய்த கனமழையில் சென்னை உட்பட, காஞ்சிபுரம், கடலூர் போன்ற பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. மக்களின் வாழ்நாள் சேமிப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். 
 
எனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், இழப்புக்கு ஏற்றவாறு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஏற்கன்வே ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டார்கள்.
 
வெள்ள நிவாரண தொகை குறித்து இன்று அறிவிப்பு வெளியிட்ட ஜெயலலிதா, வரும் ஜனவரி 11 ஆம் தேதிக்குள் அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும், முதல் கட்டமாக நாளை 14 லட்சம் குடும்பங்களுக்கு, அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்