இந்நிலையில், கலாமின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள ராமேசுவரம் அருகே உள்ள பேய்க்கரும்பு நினைவிடத்தில், மணிபண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. அதை தொடர்ந்து, அப்துல் கலாமின் 7 அடி உயர வெண்கலச்சிலையை மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு மற்றும் மனோகர் பரிக்கர் திறந்து வைத்தனர். இந்நிகழச்சியில், தமிழக அமைச்சர் மணிகண்டன், அன்வர்ராஜா, நிலோபர் கபில்,ஆகியோரும், பாஜக சார்பாக தமிழிசை சவுந்திர்ராஜன், பொண்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.