செம்மண் குவாரி வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி நீதிமன்றத்தில் ஆஜர்

சனி, 10 அக்டோபர் 2015 (19:59 IST)
செம்மண் குவாரி வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
 

 
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூந்துறை செம்மண் குவாரியில் விதிமுறைகளை மீறி மண் அள்ளப்பட்டதாக குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
 
அதன் பேரில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் டாக்டர் பொன்.கவுதம சிகாமணி உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விழுப்புரத்தில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
 
இந்த வழக்கு இன்று நீதிபதி சுந்தரமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் பொன்முடி, கோதகுமார், கோபிநாத், லோகநாதன், ஜெயச்சந்திரன், சதானந்தம், ராஜ மகேந்திரன் ஆகியோர் ஆஜரானார்கள்.
 
டாக்டர் பொன்.கவுதமசிகாமணி மட்டும் ஆஜராகாதது குறித்து அவரது வழக்கறிஞர்கள் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். பின்னர், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 6ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்