அதிமுகவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.

வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (05:50 IST)
அதிமுகவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் இணைந்தனர்.
 

 
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளர் எம்.என். மனோகரன், கோவை முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ், சிவகங்கை மாவட்டம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சி.டி. சுரேஷ் மற்றும் த.சிதம்பரம்,  ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர்.
 
மேலும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஜனசேவா கேந்திரம் அமைப்பின் நிறுவனர் ஜே சதீஷ்குமார், புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏக்கள் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் மற்றும் க.நடராசன் ஆகியோரும் அதிமுகவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்