தமிழக அமைச்சரவையில் 25ஆவது இடத்தை பிடித்த ஆனந்தன்

புதன், 19 ஆகஸ்ட் 2015 (22:50 IST)
புதிய வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஆனந்தனுக்கு, தமிழக அமைச்சரவையில், 25ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது.
 
கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி, புதிய வனத்துறை அமைச்சராக ஆனந்தன் பதவியேற்றுக் கொண்டார். இதனையடுத்து, அமைச்சர்களின் சீனியாரிட்டி பட்டியலை, பொதுத்துறை வெளியிட்டுள்ளது.
 
அதன்படி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வரிசைப்படி இடம் பிடித்துள்ளனர். 
 
இதனையடுத்து, புதிய வனத்துறை அமைச்சர் ஆனந்தனுக்கு 25ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு அடுத்து, அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், பூனாட்சி, அப்துல் ரஹீம், விஜயபாஸ்கர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்