மீன் வரத்து அதிகரிப்பு; மலிவாய் கிடைத்த மீன்கள்! – மகிழ்ச்சியில் மக்கள்!

ஞாயிறு, 26 ஜூன் 2022 (10:16 IST)
சென்னை காசிமேடு சந்தையில் மீன் வரத்து அதிகரித்துள்ளதால் விலையும் மிக குறைந்துள்ளது.

மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடந்த வாரங்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். எனினும் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் மீன் விலை அதிகமாக இருந்தது. இன்று விடுமுறை நாள் என்பதால் மக்கள் பலரும் மீன் வாங்க காசிமேடு சந்தையில் குவிந்திருந்தனர்.

அதேசமயம் இன்று மீன்கள் வரத்தும் அதிகமாக உள்ளதால் விலையும் கனிசமாக குறைந்துள்ளது. நெத்திலி, வெள்ளை ஊடான் உள்ளிட்ட மீன்கள் கிலோ ரூ.100க்கு விற்பனையாகியுள்ளன. கடம்மா ரூ.280க்கும், பாறை ரூ.300க்கும், சங்கரா ரூ.300க்கும் விற்பனையாகியுள்ளது. வஞ்சிரம் கிலோ ரூ.1100க்கு விற்பனையாகியுள்ளது. நண்டு, இறால் கிலோ ரூ.350க்கு விற்பனையாகியுள்ளது. விடுமுறை நாளில் மீன் விலை குறைந்துள்ளது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்