சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை ஏற்றிச்சென்ற வாகனத்தில் திடீர் தீ

வெள்ளி, 19 பிப்ரவரி 2016 (11:09 IST)
சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை விமானத்தில் ஏற்றுவதற்காக கொண்டு சென்ற வாகனம் தீப்பிடித்து எரிந்தது.


 

 
சென்னை விமான நிலையத்தில் இருந்து கொழும்புவிற்கு செல்ல விமானம் தயாரானது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகள் ஏற்றிக்கொண்டு வாகனம் ஒன்று விமானத்தை நோக்கி சென்றது.
 
அதந்த வாகனம் விமானத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது திடீரென முன்பக்கத்தில் இருந்த பேட்டரியில் இருந்து புகை வந்தது.
 
இதைத் தொடர்ந்து, அந்த வாகனம் தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், வாகனத்தை நிறுத்திலிருந்த கீழே குதித்து உயிர் தப்பினார்.
 
இதைத் தொடர்ந்து, அந்த வாகனம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைக் கண்ட விமான நிலைய தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
 
அந்த தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகளின் உடைமைகளும் பாதுகாக்கப்பட்டது.
 
இந்த விபத்திற்கு வாகனத்தில் உள்ள பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவே காரணம் என்று கூறப்படுகிறது.
 
மேலும், இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்