காட்டுமன்னார்குடியில் பட்டாசு ஆலை வெடிவிபத்து - 9 பேர் பலி!

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (14:02 IST)
காட்டுமன்னார்குடி அருகே குருங்குடி பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில்  பகுதிக்கு அருகே குருங்குடி எனும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள காந்திமதி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் அங்கு வேலை செய்துகொண்டு இருந்த 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதில் காந்திமதி உட்பட, மலர்கொடி, சித்ரா, லதா, ராசாத்தி ஆகிய 5 பெண்களும் அடக்கம். மேலும் சிலர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சம்மந்தமாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்