திருவாரூர், அன்னுக்குடி பகுதியை சேர்ந்த மாதவன், வைஷ்ணவி தம்பதியினர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அம்மா வீட்டில் இருந்த வைஷ்ணவியிடம், மாதவன் தகராறு செய்துள்ளார். இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபத்தில் வைஷ்ணவியிடம் இருந்த 3 மாத குழந்தை ரோஹித்தை பறித்து சுவற்றில் வீசியுள்ளார் மாதவன்.