வாய்ஜாலத்திலேயே இந்த அரசு காலத்தை கடத்துகிறது: விஜயகாந்த் குற்றச்சாட்டு

வியாழன், 9 ஜூலை 2015 (08:31 IST)
தூர்வாருதல், மதகுகளை பழுது பார்த்தல், கரையை பலப்படுத்துதல் போன்ற அடிப்படை பணிகள் எதையுமே செய்யாமல் வாய்ஜாலத்திலேயே இந்த அரசு காலத்தை கடத்துகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாற்றியுள்ளார்.


 

 
 இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
மேட்டூர் அணையை திறந்தால் கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு உரிய கால்வாய்களில் நீண்ட நாட்களாக தூர்வாராத காரணத்தினால் வண்டல் மண் படிந்து, ஆகாயத்தாமரைகளும், பிற செடி கொடிகளும் மண்டிக்கிடக்கிறது.
 
தூர்வாருதல், மதகுகளை பழுது பார்த்தல், கரையை பலப்படுத்துதல் போன்ற அடிப்படை பணிகள் எதையுமே செய்யாமல் வாய்ஜாலத்திலேயே இந்த அரசு காலத்தை கடத்துகிறது.
 
5 லட்சம் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு பயிர்க் கடன் வழங்கப்படவில்லை, விவசாய இடுபொருட்களும் சரிவர கிடைப்பதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
 
விவசாயிகளின் நான்காண்டு வேதனைகளை கண்டுகொள்ளாமல் சுயநலத்தோடு, அரசியல் ஆதாயத்திற்காக விவசாயிகளை பயன்படுத்திகொள்ளும் போக்கை கைவிட்டு, அவர்களின் இன்னல் தீர நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு  அந்த அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்