தண்டவாளத்தில் சமையல் செய்து விவசாயிகள் போராட்டம்

திங்கள், 17 அக்டோபர் 2016 (12:22 IST)
காவிரி மேலாண்மை அமைக்க கோரி தஞ்சையில் விவசாயிகள் ரயில் தண்டவாளத்தில் சமையல் செய்து போராட்டம் நடத்தினர்.
 

 
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், தேவையான நீரை காவிரியில் திறந்துவிட வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் விவசாயிகள் 48 மணி நேர ரயில் மறியல் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
 
இப்போராட்டத்திற்கு மக்கள் நலக்கூட்டு இயக்க அங்கங்களான மறுமலர்ச்சி திமு கழகம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்து பங்கேற்கின்றன.
 
ஆனால், ஆளும் அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் இந்தப் போராட்டத்தில் பெங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை முதல் தொடங்கிய இந்த ரயில் மறியல் போராட்டம் நாளை வரை, அதாவது 48 மணி நேரம் நடைபெறுகிறது.
 
தமிழகத்தின் பல முக்கிய ரயில் நிலையங்களில் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, தஞ்சை அருகே விவசாயிகள் தண்டவாளத்தில் சமையல் செய்து போராட்டம் நடத்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்