ஃபேஸ்புக், டுவிட்டர், யூ டியூப் இணையதளங்கள் முடக்கம்: வட கொரியா அதிரடி

வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (17:00 IST)
ஃபேஸ்புக், யூடியூப், டுவிட்டர் உள்ளிட்ட இணையதளங்களை முடக்குவதாக வட கொரிய அரசு அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.


 

 
இது குறித்து, வட கொரியாவின் தொலைத் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஃபேஸ்புக், டுவிட்டர், யூ டியூப் இணையதளங்கள், மற்றும் வட கொரிய அரசுக்கு எதிரான கொள்கைகளை வெளியிடும் இணையதளங்கள் மற்றும் பாலியல் தொடர்பான இணையதளங்கள் ஆகியவற்றை இந்த வாரம் முடக்கப்படும்.
 
அதன்படி, பியாங்யாங்கில் வெள்ளிக்கிழமை முதல் இந்த இணையதளங்களைப் பார்க்க இயலாது" என்று கூறப்பட்டுள்ளது.
 
ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், முதலாளித்துவ அரசுக்கு எதிராகவும், பொதுவுடைமை கொள்கையை அடிப்படையாகவும் கொண்ட நாடாக வட கொரியா இருந்து வருகின்றது.
 
இந்நிலையில், அந்நாட்டை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உளவு பார்த்து வரும் நிலையில் இந்த அறிவிப்பை வட கொரியா வெளியிட்டுள்ளது.
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வட கொரியாவில் அமெரிக்க உளவாளி ஒருவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் உளவு பார்ப்பதற்காக அமெரிக்காவால் அனுப்பட்டதை ஒப்புக் கொண்டு, ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்