வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில்

புதன், 20 ஜனவரி 2016 (14:43 IST)
சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் நீடிப்புக்கு தமிழக அரசு ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கியின் உதவியை பெற இருக்கிறது என்று கவர்னர் உரையில் அளுநர் ரோசய்யா கூறினார்.


 


 
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயில் வெற்றிகரமாக இயக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மெட்ரோ ரெயில் திட்டத்தை வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர், விம்கோ நகர் வரை விரிவுபடுத்துவதற்கான ஒப்புதலை வழங்க மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்தி வருகிறது. இதை செயல்படுத்த மத்திய அரசும் விரைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக அளுநர் ரோசய்யா தெரிவித்தார்.
 
மேலும், மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிக்கு 8 கிலோ மீட்டர் நீளமுள்ள மூன்று வழித்தடப் பணிகளை சுமார் 44,000 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ள ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கியின் உதவியை பெற தமிழக அரசு ஆரம்பகட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்