ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன் சற்று முன் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன் பின் செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு வரவேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவரும் பிரச்சாரத்திற்கு வருவார் என்றும் அவர் தெரிவித்தார்