ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு சம்மன்

வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (13:30 IST)
முதலமைச்சர் தொடர்ந்த அவதூறு வழக்கில் இளங்கோவன் நேரில் அஜராகும் படி நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சர்  ஜெயலலிதாவை  அவரது இல்லத்தில் சென்று சந்ததித்து பேசினார். இதனை தவறாக சித்தரித்து தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் செய்தியாளருக்கு பேட்டியாளித்தார்.

இதைத்தொடர்ந்து, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீதும் இந்த பேட்டியை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைக்காட்சி மீதும் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் தனியார் தொலைக்காட்சி, சி.யி.ஒ .தொலைக்காட்சியின் ஆசிரியார் ஆகிய மூன்று பேரும் அக்டோபர் 1 ஆம் தேதி நேரில் அஜராகும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்