ஊராட்சிக்கு செலவு செய்யும் தொகையில் 5 சதவீதம் கூட திரும்ப வருவதில்லை! - அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!

J.Durai

திங்கள், 26 பிப்ரவரி 2024 (09:35 IST)
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அடுத்த காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை திறந்து வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், “அரசு ஊராட்சிகளுக்கு செலவு செலவு செய்யும் தொகைகளில் 5 சதவீதம் கூட திரும்ப வருவாயாய் கிடைப்பதில்லை” என பேசினார்.


 
சிவகங்கையை அடுத்துள்ள காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதுடன் அப்பகுதியில் சாலை விரிவாக்க பணியின் காரணமாக பழைய கட்டிடம் இடித்து அகற்றப்படவுள்ளது. இந்நிலையில் அந்த ஊராட்சிக்கென ரூ37 லட்சம்  நிதி ஒதுக்கப்பட்டு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது. அதனை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிரங்கால் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்ற நிலையில் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் பெரியகருப்பன் அரசின் சார்பில் ஊராட்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதுடன் அதிக திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் ஆனால் அந்த நிதியில் 5 சதவீத நிதி கூட திரும்ப வருவாயாய் ஊராட்சிக்கு கிடைப்பதில்லை என்றும் இருந்த போதிலும் தொடர்ந்து அரசு அதிகளவில் நிதி ஒதுக்கிவருகிறது என்றும் பேசினார்.

இந்ந நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், மாவட்ட திட்ட அலுவலர் சிவக்குமார், காஞ்சிரங்கால் ஊராட்சிமன்ற தலைவர் மணிமுத்து மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்