கட்டாய தமிழ்ப் பாடத்தை எதிர்த்து கன்னட அமைப்பு ஆர்பாட்டம்

வியாழன், 22 ஜனவரி 2015 (13:11 IST)
தமிழகத்தில் உள்ள கன்னட பாடம் படிக்கும் பள்ளிகளில் தமிழ்ப் பாடம் கட்டாயமாக்கப்பட்டதை கண்டித்து கன்னட அமைப்பினர் ஆர்பாட்டம் நடத்தினர்.


 
தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மற்றும் ஒசூரில் கன்னட பாடம் கொண்ட தமிழக அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறன.
 
இந்த பள்ளிகளில் தமிழ்ப் பாடம் கட்டாயமாக தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கன்னட அமைப்பான சல ஒளி கட்சியின் மாநில தலைவர் வாட்டால் நாகராஜ் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது.
 
சத்தியமங்கலம் அடுத்துள்ள தமிழ்நாடு கர்நாடக எல்லைப்பகுதியான புளிஞ்சூரில் நடந்த இந்த ஆர்பாட்டத்தில் கட்சி கொடியுடன் கலந்துகொண்ட கன்னட அமைப்பினர் தமிழ்மொழியை எதிர்த்து முழக்கமிட்டனர்.
 
ஆர்பாட்டம் செய்தவர்களை கர்நாடக காவல்துறையினர் கைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்