ஈரோடு கிழக்கு எம் எல் ஏ திருமகன் ஈ வெ ரா மாரடைப்பால் மரணம்!
புதன், 4 ஜனவரி 2023 (13:55 IST)
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் பிரமுகர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ வெ ரா சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.
சில தினங்களாக அவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தியுள்ளார். அவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவனின் மகன் ஆவார். இவரின் திடீர் மறைவு காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.