பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ்-ஈபிஎஸ்-க்கு அனுமதியா?

சனி, 8 ஏப்ரல் 2023 (10:28 IST)
பிரதமர் மோடி இன்றைய தமிழகம் வர இருக்கும் நிலையில் அவர் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரையும் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
தமிழகம் வரும் பிரதமரை சந்திக்க தனித்தனியாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் நேரம் கேட்டதாகவும் இது குறித்து பரிசீலினை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி இன்று தமிழகம் வரும் பிரதமரை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் தனித்தனியாக சந்திக்கின்றனர் என்றும் இருவருக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய தரப்பினரும் பிரதமரை சந்தித்தபின் அதிமுகவில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்