என்ஜினீயரிங் விண்ணப்பம் விற்பனை ஒரு லட்சத்து 68 ஆயிரத்தை தாண்டியது

திங்கள், 12 மே 2014 (10:18 IST)
என்ஜினீயரிங் சேர்வதற்கான விண்ணப்பம் விற்பனை ஒரு லட்சத்து 68 ஆயிரத்தை தாண்டியது.
தமிழ்நாட்டில் 600-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்தும் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவ-மாணவிகளை பி.இ. படிப்பில் சேர்ப்பதற்காக கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது.
 
அது தொடர்பாக மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பம் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 60 இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது.
 
கடந்த 7 வேலை நாட்களில் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 780 விண்ணப்ப படிவங்கள் விற்கப்பட்டுள்ளன.
 
விண்ணப்பம் விற்கப்பட்ட விவரம் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆம் தேதி 69 ஆயிரத்து 943 படிவங்களும், 5 ஆம் தேதி 48 ஆயிரத்து 593 படிவங்களும், 6 ஆம் தேதி 14 ஆயிரத்து 985 படிவங்களும், 7 ஆம் தேதி 9 ஆயிரத்து 884 படிவங்களும், 8 ஆம் தேதி 7242 படிவங்களும், 9 ஆம் தேதி 8497 படிவங்களும், 10 ஆம் தேதி 9 ஆயிரத்து 636 படிவங்களும் விற்கப்பட்டுள்ளன.
 
கடந்த ஆண்டு ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர்கள் சேர்ந்த கட்ஆப் மதிப்பெண் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்