இன்று மாலை 6மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக அல்லது கூட்டம், ஊர்வலம் நடத்தியதாக அல்லது வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் பிரச்சாரம் செய்யும் வகையில் ஏதாவது வெளியிட்டால் அவர்கள் மீது 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126வது பிரிவின்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, அரசியல் கட்சிகளும் அனைத்து வேட்பாளர்களும் இந்த விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடித்து தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ள நேரத்திற்குள் பிரச்சாரத்தையும் மின்னணு ஊடகங்களில் விளம்பரம் செய்வதையும் முடித்துக்கொள்ளுமாறு ராஜேஷ்லக்கானி அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.