சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு பதிவு எந்திரங்கள் வரவழைப்பு: சேலம் ஆட்சியர் தகவல்

சனி, 16 ஜனவரி 2016 (10:36 IST)
2016 ஆம் ஆண்டிற்கான சட்டப் பேரவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. 


 


புனேவிலிருந்து 2,700-க்கும் அதிகமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேலம் கொண்டு வரப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் தெரிவித்துள்ளார்.
 
செய்தியாளரிடம் பேசிய சேலம் ஆட்சியர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய கவலர்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 
 
இவற்றை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட  ஆட்சியருமான சம்பத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலம் மாவட்டத்தில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் விரைவில் தொடங்கும் என தெரிவித்தார். 
 
மேலும் ஓட்டுப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் உள்ளிட்டவை தேவையான இடங்களுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சம்பத் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்