ஓ.பி.எஸ் அணிக்கு சிக்கலை ஏற்படுத்திய இரட்டை மின் கம்பம் சின்னம்...

சனி, 1 ஏப்ரல் 2017 (11:17 IST)
இரட்டை மின்கம்ப சின்னத்தை இரட்டை இலை சின்னத்தை போல் ஓ.பி.எஸ் அணி பயன்படுத்தி வருவதாக தினகரன் அளித்த புகாரின் அடிப்படையில், தேர்தல் கமிஷன் மதுசூதனனுகு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.


 

 
அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓ.பி.எஸ் மற்றும் தினகரன் அணி என இரண்டாக உடைந்தது. இதில் இரட்டை இலை எங்களுக்கே சொந்தம் என இரு அணிகளும் தேர்தல் கமிஷனிடம் முறையிட்டனர். ஆனால், அந்த சின்னத்தையும், அதிமுக என்ற பெயரையும் இரு அணியினருமே பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.
 
எனவே, ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் மதுசூதனன் இரட்டை மின் கம்பம் சின்னத்திலும், தினகரன் தொப்பி சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். இதற்கிடையில், இரட்டை மின் கம்பம் சின்னம் பார்ப்பதற்கு இரட்டை இலையைப் போலவே இருப்பதால், அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, உள்நோக்கத்தோடு, வாக்களார்களின் மனதில் இரட்டை இலை சின்னம் என பதியும் வகையில் ஓ.பி.எஸ் அணி பிரச்சாரம் செய்து வருவதாக தினகரன் தரப்பு தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்தது.
 
எனவே, வருகிற 3ம் தேதி (திங்கட் கிழமை) காலை 9 மணிக்குள் இதற்குறிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என தேர்தல் கமிஷன், ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
 
இந்த விவகாரம் ஓபிஎஸ் அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்