தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஏப்ரல் 23ம் தேதியான நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. எனவே தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் அணையின் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தமாக இந்த முறை 4023 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
நாளை காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. எனவே நாளை வாக்களிக்க பொதுமக்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்..
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 பேர் எனவும், தமிழகத்தில் மொத்தம் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், 62 வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்..
மேலும் 326 தேர்தல் பார்வையாளர்கள், 136 பொது பார்வையாளர்கள், 40 காவல் பார்வையாளர்கள், 150 செலவீன பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார். குறிப்பாக தமிழகத்தில் 5949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும் அவர் அறிவித்தார். அதோடு தமிழகத்தில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியிருப்பதாகவும் அர்ச்ச பட்நாயக் தெரிவித்தார். அதோடு பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.