சென்னை நிவாரண முகாம்களில் 8000 பேர் தஞ்சம்

புதன், 25 நவம்பர் 2015 (14:53 IST)
சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக, சென்னையில் உள்ள நிவாரண முகாம்களில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


 

 
சென்னையில், கடந்து இரண்டு வாரங்களாக பெய்த கனமழையில், வேளச்சேரி, ராம்நகர், விஜயநகர், அம்பத்தூர், நொளம்பூர், நெசப்பாக்கம், வில்லிவாக்கம், கோயம்பேடு, அரும்பாக்கம், முடிச்சூர், தாம்பரம் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது., 
 
இதனால் சென்னை வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியினர்.  பல பகுதிகளில் மக்கள் தங்கள் வீட்டிற்குள் வசிக்க முடியாமலும், வெளியே வர முடியாலும் திணறினர். அவர்களையெல்லாம் மிட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படுகிறார்கள்.
 
அப்படி, இதுவரை  சுமார் 8000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளம் வடிந்த பகுதிகளில் வசித்தவர்கள் வீடு திரும்பி வருகிறார்கள். இன்னும் வெள்ளம் வடியாத பகுதியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து நிவாரண முகாம்களிலேயே தங்கி உள்ளனர். முகாம்களிலேயே அவர்களுக்கு மருத்துவ வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்