திட்டமிட்டபடி 12ம் வகுப்பு தேர்வு நடைபெறுமா? – அதிகாரிகள் அவசர ஆலோசனை!

வியாழன், 8 ஏப்ரல் 2021 (15:34 IST)
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் 12ம் வகுப்பு தேர்வுகளை நடத்துவது குறித்து அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னதாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்பட்டால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள மாணவர்கள் தேர்வு எழுத என்ன வழி என்பது குறித்தும் ஆலோசனையில் விவாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்