விடுமுறை எடுத்தால் சம்பளம் கிடையாது: ஆசிரியர்களுக்கு உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை

வியாழன், 10 நவம்பர் 2022 (12:03 IST)
பகுதிநேர ஆசிரியர்கள் விடுமுறை எடுத்தால் விடுமுறை நாட்களில் சம்பளம் கிடையாது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் படி தொகுப்பூதியத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பகுதிநேர ஆசிரியர்கள் விடுமுறை எடுத்தால் விடுமுறை நாட்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 
தற்காலிக தொகுப்பூதியத்தில் பணி செய்யும் ஆசிரியர்கள் ஒரு வாரத்திற்கு மூன்று அரை நாள்கள் பணி புரிந்தால் மட்டுமே அந்த மாதத்திற்கான முழு மாத ஊதியம் கிடைக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 
 இந்த விவகாரத்தில் உரிய வழிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்