சிரிப்பின் சூட்சமம் என்ன? வைரலாகும் ஈபிஎஸ் - மோடி புகைப்படம்!

திங்கள், 8 அக்டோபர் 2018 (18:59 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். இவர்களது சந்திப்பு தொடர்பான புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மோடி பல முறை சந்தித்துள்ளனர். ஆனால், இந்த புகைப்படத்தில் இருவரும் பிரகாசமான சிரிப்புடன் காட்சி அளிக்கின்றனர். இந்த முகமலர்ச்சி என்பது வழக்கத்திற்கு மாறானதாக கருதுகின்றனர். 
 
வழக்கமாக பிரதமர் மோடி, இறுக்கமான முகத்துடன் தலைவர்களை சந்தித்து உள்ளதை புகைப்படங்களில் பார்த்துள்ளோம். ஆனால் இன்றைய புகைப்படம் முற்றிலும் மாறுபட்டு காணப்பட்டது. இருவரின் இந்த மகிழ்ச்சிக்கு என்ன காரணம் என விசாரித்த போது பின்வருமாறு பதில் கிடைத்தது,
வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக ஒப்புக்கொண்டதோ? என்ற சந்தேகம்தான் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
முதல்வரிடம், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுப்பிய போது, தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. தேர்தல் வரும்போது அது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். எனவே இந்த சிரிப்பிற்கு பின்னர் ஏதோ சூட்சமம் உள்ளதாகவே தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்