நம்ப வைத்துக் கழுத்தறுத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி - நடிகர் கருணாஸ்
ஞாயிறு, 7 மார்ச் 2021 (09:31 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் கருணாஸ். இவர் தற்போது சட்டசபைத் தேர்தலையொட்டி தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் முதல்வர் பழனிசாமியை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம்
பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் கருணாஸ் முதல்வர் பழனிசாமி நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
முக்குலத்தோர் சமுதாயத்தை எடப்பாடி பழனிசாமி அரசியல் அனாதையாக்க முயற்சிக்கிறார். அரசியல் ஆதாயத்திற்காகவே வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அவசர அவசரமாக வழங்கப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவன் பெயர் வைக்கலாம் என பாஜக வாக்குறுதிஅளித்து ஏமாற்றிவிட்டது.
மேலும், எங்கள் சமுதாயத்தினர் 184 தொகுதிகளில் இருக்கிறார்கள்..அப்பகுதிகளில் உள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து அதிமுகவிற்கு எதிராக பிரச்சார செய்யப் போகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.