ஆனால், அந்த கருத்தை எனது முகநூல் அட்மின் பதிவு செய்துவிட்டார். அதைப் பார்த்ததும் நான் நீக்கிவிட்டேன் என ராஜா விளக்கம் அளித்தார். ஆனால், அந்த விளக்கத்தை யாரும் ஏற்கவில்லை.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஹெச்.ராஜாவிற்கு தெரியாமல் அவரது முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிட்ட அட்மினுக்கு கண்டனத்தை தெரிவிப்பதாக கூறினார்.
எதிர்ப்பு கிளம்பியதும் அட்மின் என ராஜா பொய் சொல்கிறார் என பலரும் கருத்து கூறி வரும் வேளையில், ஹெச்.ராஜாவின் அட்மினுக்கு முதல்வர் கண்டனம் தெரிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.