பொதுச்செயலாளர் பதவி செல்லாது: சசிகலா தலையில் அடுத்த இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்!!

புதன், 8 பிப்ரவரி 2017 (14:10 IST)
அதிமுகவின் பொதுச் செயலாளர் என மார்தட்டிகொள்ளும், சசிகலா நடராஜனின் தற்காலிக பொதுச் செயலாளர் பதவி செல்லாது என்று தேர்தல் ஆணையம் அதிரடியாய் அறிவித்துள்ளது.


 
 
அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டார். அதிமுக சட்டவிதிகளின் படி பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமின்றி அதிமுக உறுப்பினர்களும் ஓட்டுப் போட்டு தேர்வு செய்தால் மட்டுமே ஒருவர் பொதுச் செயலராக முடியும்.
 
இந்நிலையில், கட்சி விதிமுறைகளை மீறி, சசிகலா நடராஜன் அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அவரது நியமனம் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதே போல், அதிமுக சட்டவிதிகளில் திருத்தம் கொண்டுவராமல் இடைக்கால பொதுச்செயலர் என ஒருவரை நியமிக்க முடியாது. மேலும், அவரது நியமனம் பற்றிய ஆவணங்கள் இதுவரையிலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
எனவே, இதனை முன்வைத்து சசிகலா நடராஜன் தற்காலிக பொதுச்செயலராக உள்ளது செல்லுபடியாகாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்