2016ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நான் எழுதிய கடிதம் காரணமாக,தேனி மாவட்டத்தில் சோதனை முயற்சியாக ஆற்றின் கரைகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட அன்று, வைகை அணைக்கு வந்துசேரும் நீரின் அளவு 160Cusecs ஆக ஒரே நாளில் அதிகரித்தது. ஆனால், அவர் மறைந்த பின்னர் நிலை மேலும் மோசமடைந்தது
தண்ணீர் திருட்டு தொழிலாக மாறிய காரணத்தால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, நகரங்களில் வாழும் மக்கள் குடிநீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. தண்ணீர் திருட்டுக்கு துணையாக மின்சார திருட்டும் நடப்பதால் நாளொன்றுக்கு ரூ.30 லட்சம் அளவிற்கு மின்சாரத்துறைக்கு இழப்பு ஏற்படுகிறது.