சென்னையில் வீடுகளில் புகுந்த மழைநீர்: பள்ளிக்கரணையில் மக்கள் அவதி

புதன், 18 மே 2016 (14:55 IST)
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பள்ளிக்கரணை பகுதியில் மழைநீர் வீடுகளில் புகுந்தது.
 

 
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை நீடித்தாலும் பாதிப்பு இருக்காது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
இதைத்தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 12-14 செ.மீ மழை பெய்துள்ளது. 
 
இந்நிலையில் வேளச்சேரிக்கு அடுத்துள்ள பள்ளிக்கரணையில் ஐஐடி காலனி, காமகோடி காலனி, விஜிபி காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தெருக்களில் சூழ்ந்துள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வீடுகளில் புகுந்து மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இதையடுத்து மழைநீர் சாலைகளில் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் மழை பாதிப்பு காரணமாக சென்னையில்  முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பி.சந்திரமோகன் கூறியதாவது:- தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளன, மொத்தம் 22 படகுகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 

வெப்துனியாவைப் படிக்கவும்