ஆடை கட்டுப்பாட்டுக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்ற மதுரை கிளை

திங்கள், 11 ஜனவரி 2016 (11:57 IST)
கோயில்களுக்குச் செல்ல ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்ததற்கு இடைக்காலத்தடை வித்தித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.


 

 
தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து நவம்பர் 26 ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
அதன்படி, ஆடைக்கட்டுப்பாடு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. அதன்படி ஜீன்ஸ், லெகின்ஸ், அரைக்கால் சட்டி உள்ளிட்டவற்றை அணிந்து கோயிலுக்கு வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில், இந்த ஆடை கட்டுப்பாடு தனிமனித உரிமையில் தலையிடுவதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆடை கட்டுப்பாட்டிற்கு வரும் 18 ஆம் தேதி வரை இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்