ஆங்கிலோ இந்தியன் எம்எல்ஏவாக டாக்டர் நான்சி சிந்தியா நியமனம்

செவ்வாய், 31 மே 2016 (07:31 IST)
தமிழக சட்டசபைக்கு, டாக்டர் நான்சி சிந்தியா என்ற ஆங்கிலோ இந்தியன் எம்எல்ஏ-வை தமிழக ஆளுநர் ரோசய்யா நியமனம் செய்துள்ளார்.
 
தமிழக சட்டசபைக்கு கடந்த மே 16 ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற்று, மே 19 ஆம் தேதி வாக்கு எணணிக்கை நடைபெற்றது. இதில் 134 தாெகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியைப்பிடித்தது. முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார். பின்பு, வெற்றி பெற்ற அனைவரும் எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டனர்.
 
இந்த நிலையில், தமிழக சட்டசபைக்கு, டாக்டர் நான்சி சிந்தியா என்பவரை ஆங்கிலோ இந்தியன் எம்எல்ஏ-வை தமிழக ஆளுநர் ரோசய்யா நியமனம் செய்துள்ளார்.
 
கேரள மாநிலம் ஆலப்புழாவில், கடந்த 1955 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி ஆங்கிலோ இந்தியராக பிறந்த இவருக்கு  திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டாக்டராகப் பணியாற்றி வருகிறார்.
 
தற்போது, அகில இந்திய ஆங்கிலோ இந்தியர்கள் சங்கத்தின் மதுரை கிளைத் தலைவராக உள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்