இரண்டு பெண்டாட்டியுடன் கள்ளக்காதலியும் வைத்திருந்த கிராம நிர்வாக அதிகாரி வெட்டிக்கொலை

புதன், 18 மார்ச் 2015 (10:34 IST)
2 பெண்களை திருமணம் செய்த கிராம நிர்வாக அலுவலர் 3ஆவது பெண்ணுடன் தொடர்பு தகராறில் வைத்திருந்த கிராம நிர்வாக அதிகாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
 
தேனி மாவட்டம் சீலையன்பட்டியைச் சேர்ந்த முத்து (31) என்பவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி கொடியன்குளத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியில் சேர்ந்துள்ளார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த மாலா என்ற பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்.
 
பின்னர் அதிகாரி முத்து, கடம்பூர் அருகே உள்ள இளவேலங்கால் கிராமத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டபோது அப்பகுதியில் திருமணமாகி கணவரை பிரிந்து ஒரு மகனுடன் தனியாக வாழ்ந்து வந்த சத்யா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
 
அவரையும் அதிகாரி முத்து 2ஆவது திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், முத்துவுக்கும், சத்யாவுக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் சத்யாவை கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடியில் தங்க வைத்து வந்துள்ளார்.
 
இதற்கிடையில் முத்து, தெற்கு மயிலோடையில் கிராம நிர்வாக அலுவலராக இருந்தபோது, தலையால் நடந்தான்குளத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்துள்ளனர்.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

இதனை அறிந்த பேச்சியம்மாளின் கணவர் சுடலை அவர் இருவரையும் கண்டித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அதிகாரி முத்து, கயத்தாறில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளார்.
 
அப்போது தலையால் நடந்தான்குளம் வழியாக சென்ற முத்து தன்னுடைய கள்ளக்காதலியான பேச்சியம்மாளை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சுடலைக்கும், முத்துவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
 
இதனால் ஆத்திரமடைந்த சுடலை, அவருடைய மைத்துனர், பாட்டி மூவரும் சேர்ந்து முத்துவை சரமாரியாக அரிவாள் மற்றும் ஆயுதங்களுடன் தாக்கியுள்ளனர். இதில் முத்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
 
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினர் பேச்சியம்மாள், அவருடைய தம்பி சின்ன உய்க்காட்டான், பாட்டி வெள்ளையம்மாள் ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தலைமரைவாக இருந்த சுடலையை நேற்று மதியம் கைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்