இந்த நிலையில் ஒருசில அயோக்கியர்கள் சமூக வலைத்தளத்தில் அனிதாவின் மரணத்தை கொச்சைப்படுத்தியுள்ளனர். ஒரு ஏழை மாணவிக்கு நீட் தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு விமானத்தில் சென்று வழக்கு தொடுக்கும் அளவுக்கு பணம் எங்கிருந்து வந்தது, அவருடைய ஸ்பான்சர் யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுபோன்றவர்களின் கருத்துகளுக்கு கடும் கண்டனங்களும் அதே சமூக வலைத்தளங்களில் எழுந்து வருகின்றன. மேலும் அனிதாவின் மரணத்த ஒருசில ஊடகங்களும், தலைவர்களும் கொச்சைப்படுத்தி பேசி வருகின்றனர். தற்கொலை என்பதை யாரும் நியாயப்படுத்தவில்லை. ஆனால் அதே நேரத்தில் தற்கொலைக்கு தூண்டியவர்கள் அதைவிட பெரிய குற்றவாளிகள் என்கிற ரீதியில் யோசித்தால் அனிதாவின் மரணத்தின் மீது யாருக்கும் சந்தேகம் வராது.