நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து – கூட்டங்களில் பேச வைகோவுக்கு தடை விதித்த மருத்துவர்கள் !

புதன், 21 ஆகஸ்ட் 2019 (08:13 IST)
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். 75 வயதிலும் தொடர்ந்து நாடாளுமன்றம் , கட்சி வேலைகள் மற்றும் மக்கள் போராட்டம் எனத் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து அவருக்கு உடல்நிலையில் சிறிது பிரச்சனைகள் ஏற்பட்டதால் மதுரை அப்போல்லோவில் நேற்று முன் தினம் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த அழுத்தம் சீராக இல்லை எனக் கூறப்பட்டது.

இதையடுத்து அதற்கான சிகிச்சை முடிந்து அவர் சென்னைக்கு நேற்று புறப்பட்டார். விமானத்தின் மூலம் சென்னைக்கு வந்த பிறகு அவரது உடல்நிலை மீண்டும் மோசமானதை அடுத்து சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரைப் பார்க்க தொண்டர்கள் யாரும் வரவேண்டாம் என்றும் அவர் நல்ல உடல்நலத்தோடு இருப்பதாகவும் மதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது உடல் நிலையை கணக்கில் கொண்டு அவர் இன்னும் இரண்டு வாரங்களுக்கு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள வேன்டாம் என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் அவர் கலந்து கொள்வதாக இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் அவரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்