'தமிழர்கள் நலன் காக்க தேவ தூதர்கள் வரமாட்டார்கள்' - பழ.நெடுமாறன்

வியாழன், 8 அக்டோபர் 2015 (20:35 IST)
தமிழர்கள் நலன் காக்க தேவ தூதர்கள் வருவார்கள் என்று காத்திராமல், இளைஞர்கள் போராடவேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

 
பழ.நெடுமாறன் ஈழத்தமிழர் படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை, இயற்கை வளம் காத்தல், மது ஒழிப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, குமரி முதல் சென்னை வரை பயணம் மேற்கொண்டுள்ளார்.
 
இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை வந்தடைந்த பழ.நெடுமாறன் அங்கு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
 
அப்போது பேசிய அவர், ”தமிழர் எழுச்சிப் பயணத்தின் நோக்கம் வாக்கு வேட்டைக்கான பயணம் இல்லை. தமிழர்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன் காக்கும் பயணம். இயற்கை வளங்கள் சீரழிவு, மது விற்பனை, சந்தர்ப்பவாத அரசியல் ஆகியவற்றால் தமிழகம் சீரழிந்து வருகின்றது.
 
இந்த சீரழிவை தடுத்து நிறுத்தவேண்டும். தமிழக மக்கள் நலனை காப்பதற்கு தேவ தூதர்கள் வருவார்கள் என்று காத்திராமல், சீரழிவைத் தடுக்க இளைஞர்கள் ஆங்காங்கு ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்