சபாநாயகரா? மேயரா? : சுப்ரமணியனே கன்புயூஸ் ஆகிட்டாரு

சனி, 6 ஆகஸ்ட் 2016 (12:38 IST)
சட்டசபை சபாநாயகரை மேயர் என்று அழைத்து அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார் முன்னாள் திமுக மேயர் சுப்ரமணியன்.


 

 
தமிழக சட்டசபையில் அதிமுக-திமுக உறுப்பினர்கள் காரசாரமாக விவாதிக் கொண்டாலும் அவ்வப்போது அனைவரையும் சிரிக்கவைக்கும் கலகலப்பான சம்பவங்களும் நடக்கும்
 
சட்டசபையில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சி துறை மானியக் கோரிக்கை மீதான விவாத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் மா. சுப்பிரமணியன் சென்னையில் மாநகராட்சி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். 
 
அப்போது குறுக்கிட பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா “திமுக உறுப்பினர் பேசுவதைக் கேட்டால், இது சட்டசபையா அல்லது சென்னை மாநகராட்சி மன்றமா என்ற சந்தேகம் வருகிறது என்று கூறினார்.
 
இதற்கு பதிலளிக்க எழுந்த சுப்பிரமணியன், சபாநாயகரைப் பார்த்து ‘ மாண்புமிகு மேயர் அவர்களே’ என அழைத்து பேசத் தொடங்கினார். இதைக் கேட்டு அனைத்து கட்சி உறுப்பினர்களும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
 
முக்கியமாக, இதைக் கேட்டு ஜெயலலிதா தனது கைகளை தட்டி சிரித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்